உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயத் சன் ஒசா  இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கண்டி தலதா மாளிககைக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட தாய்லாந்து பிரதமர் அங்கு வைக்கப்பட்டுள்ள புனித தந்த தாதுவினை வழிபட்டதுடன் சமய வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் தலதா மாளிகை  வளாகத்தில் அமைந்துள்ள உலக பெளத்த அருங்காட்சியகத்தினையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.