நக்கிள்ஸ் மலைத் தொடர்  தொடர்பான சில செயற்றிட்டங்களை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச பெருந்தோட்டத்துறை கூட்டுத் தாபனத்தின் தலைவர் திலக் மஹாநாம தெரிவித்தார்.

நட்டத்தில் இயங்கும் தோட்ட காணிகளை தனியார் கம்பனிகளுக்கு விற்று ஏதாவது ஒரு வகையில் இலாபத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்து அதற்கு அமைவாக நக்கிள்ஸ் மலைத் தொடரை அண்மித்த காணிகளை அரசாங்கம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. 

இருப்பினும் குறித்த காணிகளானது நக்கிள்ஸ் மலைத் தொடரின் வனப் பாதுகாப்புக்குட்பட்டது என தெரியவந்தமையை அடுத்த மேற்கண்ட செயற்றிட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார்.