எலிகளினால் கடல் வளம் பாதிப்பு

Published By: Daya

13 Jul, 2018 | 03:27 PM
image

எலிகளின் பெருக்கத்தினால் கடல் பறவைகள் அழிவதோடு பவளப் பாறைகளும் அழிகின்றன என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

"பவளைப் பாறைகள் கடலின் பல்லுயிர் பெருக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. அதனால், கடல்வளம் சிறப்பாக இருக்கிறது. பவளப் பாறைகள் அழிந்தால் கடல் வளம் சிதையும், கடலை நம்பி இருக்கிற இலட்சல்கணக்கானோரின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இது செலுத்தும்" என தெரிவித்துள்ளனர். 

எலிகள் கடல் பறவைகளை அழிக்கின்றன. கடல் பறவைகளின் கழிவுதான், பவளப் பாறைகளுக்கு உரமாக இருக்கின்றன. ஆக, கடல் பறவைகள் அழிய பவளப் பாறைகளும் அழிகின்றன.

வாழ்வாதாரம் எப்படி சிதையும் என்பதை தெரிந்துகொள்ள, பவளப்பாறைகள், அதற்கும் கடல் பறவைகளுக்கும் உள்ள தொடர்பு என சூழலியலின் பல அடுக்குகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பவளப்பாறைகளின் அழிவுக்கும் எலிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்த தீவில் மனிதர்கள் யாரும் இல்லை. அவ்வபோது வரும் கப்பல்களால் இந்த தீவில் எலிகள் ஊடுருவி உள்ளன.

லொன்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக் கிரகாம் தலைமையிலான குழுதான் குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. 

 "எலிகள் வருவதற்கு முன்பு இருந்த தீவின் பவளப் பாறையின் வளத்திற்கும், இப்போதுள்ள நிலைக்கும் பெரும் வித்தியாசம் தெரிகின்றது என தெரிவித்துள்ளார்.

பெருங்கடல் பரப்பில் மொத்தமே 0.1 சதவீதம்  உள்ள பவளப்பாறைகள், பெருங்கடல் உயிர்பன்மைத்துவத்திற்கு முதன்மை காரணியாக இருக்கிறது.

ஒருவர் பல்லுயிர் பெருக்கத்தை விரும்புவாராயின் அவர் நிச்சயம் பவளப் பாறைகள் அழிந்து வருவது குறித்து கவலை கொள்ள வேண்டும் என்கிறார் நிக்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி...

2023-05-29 10:23:44
news-image

மீன்பிடிப் போட்டியில் மீன்களின் உடலுக்குள் உலோகங்களை...

2023-05-26 16:43:05
news-image

களமிறங்கும் ’மோடி மாம்பழம்’ – ஏன்...

2023-05-25 16:38:24
news-image

வவுனியாவில் 8 கால்களுடன் பிறந்த அதிசய...

2023-05-24 14:28:12
news-image

காதலித்த கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்றது...

2023-05-20 12:54:29
news-image

காதல் திருமணம் செய்தவர்களே அதிகளவில்விவாகரத்து கேட்கின்றனர்......

2023-05-19 12:13:33
news-image

30,000 ரூபா சம்பளம் வாங்குபவரிடம் 7...

2023-05-12 18:04:43
news-image

திருடர்கள் பல விதம் ; பாதணிக்கடை...

2023-05-06 11:37:44
news-image

நான் என் வேலையைத்தான் செய்தேன் -...

2023-05-04 14:34:36
news-image

சாரதி மயங்கிய நிலையில் பஸ்ஸை பாதுகாப்பாக...

2023-05-01 13:25:24
news-image

நிர்வாண சூரிய குளியல் உரிமையை  நீதிமன்றத்தின்...

2023-04-28 15:39:17
news-image

"மனிதநேயம் சாகவில்லை” – அயோத்தி திரைப்பட...

2023-04-28 14:04:16