கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று, தெளுத்தெனிய பகுதியில்  வீதியை விட்டுவிலகி பாதையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு இடபெற்ற விபத்தில், வேனில் பயணித்த 11 பேர் படு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் கம்பஹா வைத்தியச்சாலையின்  அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக  தெதிகம பொலிஸார் தெரிவித்தனர்.