இலங்கைக் கடற்­ப­ரப்பில் அத்­து­மீறி நுழைந்து கடற்­றொழிலில் ஈடு­பட்­ட இந்­தியப் மீனவர்கள் 12 பேருக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால சிறைத் தண்டனையை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் பிறப்பித்துள்ளார்.  

அந்த வகையில் வட­க­டலில் அத்­து­மீறி மீன்­பி­டியில் ஈடு­பட்ட இந்­திய மீன­வர்­க­ளுக்கு எதி­ராக நேற்று தொட­ரப்­பட்ட வழக்கில் புதி­தாக அமுல்­ப­டுத்­தப்­பட்ட வெளி­நாட்டுப் பட­குகள் ஒழுங்­கு­ப­டுத்தல் சட்­டத்தின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்­ளதால் இதனை ஆராய்­வ­தற்கு கால அவ­காசம் தேவை என இந்­திய தூத­ர­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட சட்­டத்­த­ர­ணியின் கோரிக்­கைக்கமைய ஊர்­கா­வற்­றுறை நீதிவான் ஒருநாள் கால அவ­காசம் வழங்கினார்.

இதன்­படி இவ் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றம் மீளவும் விசா­ர­ணைக்கு எடுத்து கொண்டபோதே நீதிவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தனர்.

குறித்த இந்த மீனவர்கள் எதிர்வரும் ஐந்து வருட காலப் பகுதிக்குள்  மீண்டும்  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் வழங்கப்படும்.

அத்துடன் புதிய கடற்றொழில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வெளிநட்டு மீனவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.