(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசியலில் தாம் அடைந்துள்ள பின்னடைவினை அறியாமல் பிறருக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பது வேடிக்கயைான விடயம் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாரை தமது தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என்ற விடயத்தை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு துரோகமிழைத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளரை ஆட்சியில் அமர்த்த வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை. 

அத்துடன் சிறுபான்மை மக்களை பகடைக்காயாக கொண்டு அரசியல் செய்யும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் எம்.கே. சிவாஜிலங்கம் போன்றோர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித அக்கறையும் கொள்ளாது நாட்டை பிளவுபடுத்தவே முயற்சிக்கின்றனர். 

இந் நிலையில் தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசியலில் தாம் அடைந்துள்ள பின்னடைவினை அறியாமல் பிறருக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பதும் பிறரை விமர்சிப்பதும் வேடிக்கயைான விடயமாக காணப்படுகின்றது என்றார்.