மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ஜுங்கா இம்மாதம் 27 ஆம் திகதியன்று வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் பிறந்த நாள் விழா நேற்று  ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. அதன் போது அவர் தயாரித்திருக்கும் ஜுங்கா படம் இம்மாதம் 27 ஆம் திகதியன்று வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குறித்த  விழாவில் பங்குபற்றிய இயக்குநர் கோகுல், ‘இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய சூழல் உருவாகிறது. 

அங்கும் தன்னுடைய கதாபாத்திரத்தை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க நகைச்சுவை படம். ஆனால் நடிப்பு கலந்த நகைச்சுவை படம் என்று சொல்லலாம். படத்தை ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறோம். வெற்றிப் பெறும் என்று உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன்.’ என்றார்.

குறித்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன்,சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.