மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காணாமல் போன 3270 பேருக்கு என்ன நடந்­தது   

Published By: MD.Lucias

27 Feb, 2016 | 10:32 AM
image

 

 

1983 ஆம் ஆண்டு முதல் கடந்த 2015 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சுமார் 3270 பேர் காணாமல் போயுள்­ளார்கள். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்­பாக அர­சாங்கம் விசா­ரணை மேற்­கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு புலி­பாய்ந்­தகல் அ.த.க. பாட­சா­லையின் விளை­யாட்டுப் போட்­டியின் இறு­திநாள் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு அவர் குறிப்­பிட்டார். பாட­சாலை அதிபர் கே.சத்­தி­ய­வ­ரதன் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் விவ­சா­யத்­துறை அமைச்சர் கி. துரை­ரா­ஜ­சிங்கம், பிர­திக்­கல்விப் பணிப்­பாளர் தி.ரவி, கோட்­டக்­கல்விப் பணிப்­பாளர் நா.குண­லிங்கம் உட்­பட பலர் கலந்து கொண்­டனர்.அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கடந்த கால அசா­தா­ரண சூழ்­நி­லையின் போது எமது உற­வு­களில் பலர் காணாமல் போயுள்­ளார்கள். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்­பாக இது­வரை எவ்­வித தக­வல்­களும் கிடைக்­காமல் தினமும் வேத­னை­யுடன் வாழ்­கின்­றனர். 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரை­யி­லான காலப்­ப­கு­தியில் சுமார் 1552 பேர் காணாமல் போயுள்­ளார்கள். அவர்­களை இரா­ணு­வத்­தி­னரும் அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்ட ஆயு­தக்­கு­ழுக்­க­ளுமே கடத்திச் சென்­றுள்­ள­தாக அவர்­க­ளது உற­வி­னர்கள் கூறு­கின்­றனர்.1987இல் இந்­திய இரா­ணு­வத்­தி­னரால் 165 பேர் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளனர். 1990 முதல் 2015 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் 1560 பேர் காணாமல் போயுள்­ளனர். இவர்­களில் கிழக்­குப்­பல்­கலைக் கழ­கத்தில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­வர்­களில் விசா­ர­ணைக்­காக அழைத்துச் செல்­லப்­பட்ட போதும் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று இது­வரை அறி­யாத நிலையில் அவர்­க­ளது உற­வி­னர்கள் அலைந்து திரி­கின்­றார்கள். யுத்­தத்தின் பின்பு 130 க்கு மேற்­பட்­ட­வர்கள் காணாமல் போயுள்­ளார்கள். அவர்கள் பற்றி எவ்­வித தக­வல்­களும் இல்லை

காணாமல் போன­வர்­களை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு அவர்கள் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளின்­போது யார் யார் பல­வந்­த­மாக அழைத்துச் சென்­றார்கள் என காணாமல் போனவர்களது உறவினர்கள் சாட்சியமளித்துள்ளார்கள். இதுவரை இவ்விடயங்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விசாரணைகள் மீது எமது உறவுகள் நம்பிக்கையிழந்துள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21