லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிப்பக்கலை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த 26 வயதுடைய ஆணொருவர் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்யை தினம் குறித்த நபர் லிப்பகலை தோட்ட தேயிலை செடிகளுக்கு கிருமிநாசினி தெளித்துக் கொண்டிருந்தபோது கிருமிநாசினி துளிகள் காற்றின் மூலம் அவரின் மீது வீசியதால் சுவாசிக்க முடியாத நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து சக தொழிலாளர்கள் மூலம் அவர் லிந்துலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் 15 நிமிடங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.