லிந்துல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட  மட்டுக்கலை பகுதியில் கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லிந்துல மட்டுக்கலை தோட்டத்தின் லெந்தோமஸ் பிரிவில் நேற்று முந்தினம் இரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் நேற்று அதிகாலை மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் லிந்துல  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.