அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட் டுள்ளதான 2500 ரூபா சம்பள அதிகரிப்பை மார்ச் மாதத்தில் அடிப்படைச் சம்பளத்துடன் இணைப்பதற்கான ஏற்பாடுகள் நிறை வடைந்திருப்பதாகவும் அது தொடர்பிலான சுற்று நிருபம் வெளி யாகியிருப்பதாகவும் பொதுநிர்வாக மற்றும் அரச முகா­மைத்­துவ அமைச் சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

அமைச்சில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­ளாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அரச சேவை­யினை பலப்­ப­டுத்தும் முகமாக நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ச்சியான முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­துள்­ளது.. இத­ன­டிப்­ப­டை­யி­லேயே தேசிய அர­சாங்­கத்தின் நூறு நாள் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் உறு­தி­ய­ளித்­த­தன்­படி அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான அடிப்­படை சம்­ப­ளத்­தில பத்­தா­யிரம் ரூபா­வினை மேல­திக கொடுப்­ப­ன­வாக வழங்­கி­யி­ருந்­தது.

இது­வ­ரை­கா­லமும் அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான அடிப்­படை சம்­பளம் அதி­க­ரிக்­கப்­ப­டாது மேல­திக கொடுப்­ப­ன­வு­களே வழங்­கப்­பட்டு வந்­துள்­ளன. தேசிய அர­சாங்கம் பத­வி­யேற்ற பின்னர் மேல­திக கொடுப்­ப­ன­வாக 10000 ரூபா­வினை வழங்­கி­யி­ருந்­தது. ஆயினும் மேற்­கு­றித்த கொடுப்­ப­னவு அடிப்­படை சம்­ப­ளத்­துடன் இணைக்­கப்­ப­டா­ம­லி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் 2016 ஆம் ஆண்­டுக்­கான தேசிய அர­சாங்­கத்தின் வரவு – செல­வுத்­திட்­டத்தில் குறித்த கொடுப்­ப­ன­வு­களை அடிப்­படை சம்­ப­ளத்­துடன் இணைக்க ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. மேலும் அதற்­கான அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இத­ன­டிப்­ப­டையில் அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான அடிப்­படை சம்­ப­ளத்தில் 2500 ரூபா மேல­திக கொடுப்­ப­னவை இணைப்­ப­தற்­கான சுற்­று­நி­ருபம் வெளியி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் அரச சேவை­யா­ளர்­க­ளுக்­கான மேல­திக கொடுப்­ப­ன­வான 10,000 ரூபா ஐந்து கட்­டங்­க­ளாக அடிப்­படை சம்­ப­ளத்­துடன் இணைக்­கப்­ப­ட­வுள்­ளது. நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நட

வடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கின்றோம் என்றார்.