ஜப்பானில் மழையால் 86 இலட்சம் பேர் பாதிப்பு

Published By: Daya

12 Jul, 2018 | 04:25 PM
image

26 ஆண்டுகளுக்கு பின் கடும் மழை பெய்து வருவதால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஜப்பானில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக இதுவரை சுமார் 86 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 ஜப்பானில் இதற்கு முன் 1982 ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால் அங்குள்ள பல பகுதிகள், மக்கள் மற்றும் பொருளாதராம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 26 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் அங்கு மிக கடுமையான மழைபெய்து வருகிறது.  இதனால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காட்சியளிக்கின்றது.

ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள். இதுவரை 86 இலட்சம் பேர் வெளியேறி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. பெரும்பாலான வீதிகளை வெள்ளம் அடித்து சென்று விட்டது. மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயத்தில் வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மின் கம்பங்களும் சாய்ந்து விட்டன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு காணப்படுகின்றது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர், இராணுவத்தினர் 70 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீதிகள் மூடியிருப்பதால் மீட்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெய்து வரும் கடும் மழையினால் இதுவரை 249 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும்  பெரும்பாலானோரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ள நிலைமை மிக மோசமாக இருப்பதால் பிரதமர் ஷின்சோ அபே தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08