13 பேர் சிக்குண்ட தாய்லாந்து குகை தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் உள்ள குகைதான் குறித்த மோசமான வரலாற்றை சுமந்து இருக்கிறது. இந்த குறுகலான குகைக்குள் 2 வாரதிற்கு முன் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டிக் கொண்டனர் .விளையாட்டு சுற்றுலா சென்ற இவர்கள் கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்.

கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணிக்கு முழு வெற்றி பெற்று குகையில் சிக்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் 

மூன்று நாட்களாக நடைபெற்ற மீட்பு பணிககு பின் இந்த குகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இதுவும் ஒன்று என்ற பெயரை இந்த குகை பெற்றுள்ளது. தற்போது மீட்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகிறனர்.

இந்நிலையில் தற்போது இந்த சீல் வைக்கும் முடிவை கைவிட்டுள்ள தாய்லாந்து அரசு. சீல் வைத்து  இயற்கையான இடத்தை கைவிட கூடாது என்பதால் அதனை சிறந்த அருற்காட்சியகமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், அந்த இடம் முழுக்க இந்த சிறுவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் அங்கு நடந்த சில முக்கியமான விடயங்கள், திருப்பங்கள் குறித்த தகவல்களும் . அதேபோல் இது குறித்து உலக மக்கள் பேசிக்கொண்ட சில விடயங்களும் இதில் உள்ளடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.