மீட்டர் பொருத்தப்படாத மற்றும் பயணக் கட்டணத்துக்கான பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். 

அந்த வகையில் குறித்த இச் சட்டமானது எதிர்வரும ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் அறிவத்தார்.

எனினும் குறித்த இந்த தீர்மானமானது சட்டத்திற்கு முரணானது எனவும் இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத்  தாக்கல் செய்யவுள்ளதாகவும் தேசிய முச்சக்கர வண்டிகளின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.