இந்­தி­யாவில் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்குப் பிறகு ஒரு­வேளை ஓய்­வு­பெறும் முடிவை நான் எடுப்பேன் என்று இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ளரும், இரு­ப­துக்கு 20 அணியின் தலை­வ­ரு­மான லசித் மலிங்க தெரி­வித்­துள்ளார்.

இலங்கை அணி தற்­போது பங்­க­ளா­தேஷில் ஆசியக் கிண்­ணத்தில் விளை­யாடி வரு­கி­றது.

இதில் லசித் மலிங்க தலை­மை­யி­லான இலங்கை அணி முதல்­போட்­டியில் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை சந்­தித்­தது.

இந்தப் போட்­டியில் 14 ஓட்­டங்­களால் இலங்கை வெற்­றி­பெற்­றது.

இந்த வெற்­றிக்குப் பின் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்­த­போதே தான் ஓய்­வு­பெ­று­வது குறித்து சிந்­திப்­ப­தாக லசித் மலிங்க தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கூறு­கையில், எனக்கு இப்­போது 32 வய­தா­கின்­றது. கிட்­டத்­தட்ட 12 வரு­டங்­க­ளாக நான் தேசிய அணியில் விளை­யா­டி­வ­ரு­கிறேன். ஆனாலும் நான் அடிக்­கடி காயத்­திற்கு உள்­ளா­கிறேன். இது குண­மா­வ­தற்கு அதிக நாட்கள் எடுத்­துக்­கொள்­வதும் சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

ஏற்­க­னவே டெஸ்ட் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற லசித் மலிங்க தற்­போது ஒருநாள் போட்­டிகள் மற்றும் இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் மட்­டுமே விளை­யா­டி­வ­ரு­கிறார்.

இந்­நி­லையில் சர்­வ­தேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து தற்போது சிந்திப்பதாக அறிவித்துள்ளார்.