தண்ணீர் என எண்ணி அசிட்டை அருந்திய சிறுவன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம்(10-07-2018) மாலை மட்டுவில் கிழக்கு சந்திரபுரத்தில் இடம் பெற்றுள்ளது.

நகை உற்பத்திக்கென கொள்வனவு செய்யப்பட்ட அசிட்­டை விளையாடிய களைப்பில் ஓடிவந்த சிறுவன் தண்ணீர் என்று நினைத்து அருந்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து சிறுவன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட் டார் என்று தெரிவிக்கப்பட்டது.