விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலைகளை மீள் பரிசீலனை செய்து, விலை மட்டங்களை தீர்மானிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் ஆழமாக ஆராயப்பட்டதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(11-07-2018) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.