(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்திய வெளியுறவுத்துறை  செயலாளர் விஜய் கோகலே நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாட்கள் நாட்டில் தங்­கி­யி­ருக்கும் இவர் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை நாளை சந்­திக்க உள்­ள­துடன் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட அரச தலை­வர்­களை  சனிக்­கி­ழமை சந்­திக்க உள்ளார். இரு நாடு­களின் கூட்டு முயற்­சியில் முன்­னெ­டுக்க தீர்­மா­னித்து நீண்ட நாட்­க­ளாக இழு­பறி நிலையில் காணப்­ப­டு­கின்ற சுமார் 15 பாரிய திட்­டங்கள் குறித்து இந்த விஜ­யத்தின் போது அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்­களை இந்­திய வெளியு­றவு செயலர்  முன்­னெ­டுக்க உள்ளார். 

மத்­தள விமான நிலையம் , பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப கூட்டு ஒப்­பந்தம் மற்றும் பலாலி விமான நிலையம் உள்­ளிட்ட 15 இற்கும் மேற்­பட்ட பாரிய இந்­திய திட்­டங்கள் அர­சாங்­கத்தின் அங்­கீகாரம் கிடைக்­கா­மை­யினால் கிடப்பில் உள்­ளன. இந்த விட­யங்கள் குறித்து இந்திய வெளியுறவு செயலர் கருத்தில் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.