தாய்லாந்து பிரதமர் பிரியுட் சான்ஓச்சா  இரண்டு நாட்க்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். 

இன்று மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதுடன் இரு தரப்புக்களுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

பினனர் நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் வைத்து சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.