வெளிநாடுகளுக்கு அதிகம் சென்ற பிரதமர் மோடியின் பெயரை பரிந்துரைத்து கின்னஸூக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.  

மோடி பிரதமராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் அவர் 52 நாடுகளை சுற்றிப்பார்த்துள்ளார். இதற்காக 355 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது என சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிவந்தது.

இந்நிலையில், மிகவும் அதிகமான வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக கோவா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் கூறுகையில்,

பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றுள்ளார். எனவே அதிக நாடுகளுக்கு சென்ற பிரதமர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.