(எம்.எம்.மின்ஹாஜ்)

சிங்கராஜ வன பகுதியில் வாழும் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள யானைகளுக்காக யானை தடுப்பு நிலையமொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்றதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

குறித்த பகுதியில் தற்போது எஞ்சியுள்ள இரண்டு யானைகளினால் அப் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கருத்திற் கொண்டே இந்த பத்திரத்திற்கு  அமைச்சரவை அனுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது