இளைய தலைமுறையினருக்கு சவாலாகியிருக்கும் ‘சிக்கலைத் தீர்க்கும் திறன் ’

Published By: Digital Desk 7

11 Jul, 2018 | 05:08 PM
image

இன்றைய திகதியில் பல குடும்பங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் பெற்றோர்களின் வழிகாட்டலின் படியே வாழ்வை எதிர்கொள்கின்றனர். க.பொ.த சாதாரணதரத்தை முடித்தவுடன் க.பொ. த உயர்தரத்தில்  எம்மாதிரியான பாடப்பிரிவைத் தெரிவு செய்வது? அவரின் லட்சியம் என்னவாக இருக்கவேண்டும்? எதை நோக்கி பயணப்பட வேண்டும்? எப்படி படிக்கவேண்டும்? எந்தெந்த தருணங்களை எதற்காக செலவழிக்கவேண்டும்? உள்ளிட்ட பல விவரப்பட்டியலை தங்களது பிள்ளைகளுக்காக பெற்றோர்களே தீர்மானித்து அவர்களுக்கு சொல்லிவிடுகிறார்கள். இதனால் அந்த பிள்ளைகளும் அவர்களுடைய கண்காணிப்பில் இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய திகதியில் சவாலும் போட்டியும் நிறைந்த இந்த சமுதாயத்தில் அவர்களால் தனித்து இயங்க முடிகிறதா? என்றால் இல்லை என்ற பதில் உடனடியாக வருகிறது. இதில் ஒரு சில இளைய தலைமுறையினர் வெளிப்படையாகவே தங்களின் இயலாமைகளை பட்டியலிடுகிறார்கள்.

‘நாங்கள் உயர்கல்வி கற்கும் வரை பெற்றோர்களின் கட்டளைகளின் படியே நடந்து கொண்டோம். தற்போது பணியாற்றும் இடங்களில் அல்லது வேலை தேடும் இடங்களில் உருவாகும் சங்கடமான தருணங்களை எதிர்கொள்வதில் தடுமாறுகிறோம். எங்களுக்கு பெற்றோர்களால் கற்பிக்கப்பட்ட உலகத்திற்கும், நடைமுறை உலகத்திற்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது. எங்களின் பிரச்சினை என்னவென்று தெளிவாக புரிகிறது. அதாவது சிக்கலை தீர்க்கும் திறன் என்ற உளவியல் காரணி எங்களுக்கு அறிமுகமாகவில்லை. அதில் பயிற்சியும் இல்லை. அதனால் தவறான முடிவுகளை தவறு என்று அறியாமல் எடுக்கிறோம். இதனால் எங்களின் சமூக மதிப்பு என்பது விவாதத்திற்குரியதாக மாறிவிடுகிறது. அது எங்களின் நடத்தையிலும் பிரதிபலித்து தன்னம்பிக்கையை ஆட்டம் காண வைக்கிறது.’என்கிறார்கள்.

இவர்கள் எம்மைப் போன்ற உளவியல் மருத்துவ நிபுணர்களை கலந்து ஆலோசனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தை முதலில் நான் வரவேற்கிறேன். இவர்களுக்கு தங்களின் குறை என்னவென்று தெரிவதால் அதற்கான தீர்வும், அதிலிருந்து வெளியேறுவதற்கான உத்தியையும் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதும். அவர்கள் இந்த சிக்கலில் இருந்து விடுபட்டுவிடுவார்கள். அதே சமயத்தில் இது தொடர்பாக நாங்கள் பிள்ளைகளின் பெற்றோர்களிடத்தில் வைக்கும் ஒரேயொரு கோரிக்கை என்னவெனில் உயர்கல்வி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடும் போது அவர்களிடம் இது தான் சிறந்தது. இது தான் உமக்கு பொருந்தும். என்று கட்டளையிடாமல் அவர்களின் விருப்பத்தை அறிந்துகொள்ளவேண்டும். அது பொருளாதார ரீதியாக அவர்களை பெரிதாக காப்பாற்றாது என்றாலும் கூட அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் அதில் பயணப்பட அனுமதியுங்கள். அவர்கள் அந்த துறையில் சாதிப்பார்கள்.

வைத்தியர் ராஜ்மோகன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04