இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹே ஜயவர்தன இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயற்படுவது சிறப்பான ஒரு விடயம் அல்ல என இலங்கை கிரிக்கைட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட மஹேல ஜெயவர்தன கிரிக்கெட்டிருந்து ஓய்வுபெற்று ஒரு சில மாதங்களே ஆகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயற்படும் அவர் சொந்த நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார். இந்தச் செயல் எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்

கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.