நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

குறித்த இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்றை தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி தரப்பின் எழுத்துமூல விளக்கம் முன்வைக்கப்படவிருந்தது. 

இருப்பினும் பிரதிவாதி தரப்பில் எழுத்துமூல விளக்கம் தயார் படுத்தப்படவில்லை என்றும் அதற்காக வேர்ஓர் தினத்தை பெயரிடுமாறும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.

இதற்கமைவாக பிரதிவாதி தரப்பிலான எழுத்துமூல விளக்கத்தினை நாளைமறுதினம் வெள்ளிக்கழமை முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.