குடும்ப கட்டுப்பாடு  இன்மையே கருக்கலைப்புகளுக்கு காரணம்  - வைத்திய அதிகாரி தகவல்

Published By: Daya

11 Jul, 2018 | 02:55 PM
image

(அ.நிவேதா)

குடும்ப கட்டுப்பாடு  தொடர்பில் பெரும்பாலான தம்பதியினர் உரிய விளக்கத்தை பெற்றுக் கொள்ள முன்வருவதில்லை. இதனாலேயே அதிகளவிலான கருக்கலைப்புகளும், ஆரோக்கியமற்ற சிசு பிறப்பு வீதமும் அதிகரிக்கின்றன என வைத்திய ஆலோசகர் வைத்தியர் சஞ்சீவ எஸ்.பி. கொடகந்தகே தெரிவித்தார். 

உலக சனத்தொகை தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் இன்று 'குடும்ப கட்டுப்பாடு மனித உரிமையாகும் " எனும் தொனி பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக வியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும்  உரையாற்றுகையில்,

அதிகரித்துவரும் நாகரீக மாற்றத்திற்கேற்ப சமூகத்தின் மத்தியில் பல்வேறு மாற்றங்கள் நாளுக்கு நாள் இடம்பெற்று வருகின்றன.  குடும்ப அங்கத்தவர்கள் மத்தியிலான புரிந்துணர்வு, கலந்துரையாடல் , திட்டமிடல் உள்ளிட்ட பல விடயங்கள் அருகி வருகின்றன.  

குறிப்பாக தம்பதியினரிடையே குடும்ப கட்டுப்பாடு என்பது மிக அரிதான ஒரு விடயமாயிற்று. இதனால் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கிக் கொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். 

திருமணமான தம்பதியினர் 3-5 வருடங்களுக்கு இடையில்  ஆரோக்கியமான  இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்வதே சிறந்தது. ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு திட்டமிட்டுக் கொள்வதில்லை. 

அடுத்தடுத்த ஆண்டில் கர்ப்பம் தரிக்கின்றனர். இதனால் குறித்த பெண் தனது முதுமை காலத்தில் நோய் வாய்ப்பட வேண்டியுள்ளது. அதேசமயம் பிந்திய திருமணங்களும் இவ்வாறு அடுத்தடுத்து குழந்தைகளை பெற மற்றுமொரு காரணமாகவுள்ளது. 

அதாவது 30 முதல் 35 வயதுக்கு மேற்பட்டோர்  4 குழந்தைகளுக்கு மேல்  கர்ப்பம் தரிப்பது ஆபத்தானது. இதனால் தாயின் ஆரோக்கியம் இழக்கப்படுவதோடு குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் என்பன பாதிக்கப்படும். 

நாடளாவிய ரீதியில் நிமிடத்திற்கு 400 பெண்கள் கர்ப்பம் தரிக்கின்றனர். 200 பெண்கள் தயார்  நிலை இன்றி  கர்ப்பம் தரிக்கின்றனர். 100 பெண்கள் அனுபவத்தோடு அடுத்த குழந்தைக்கு கர்ப்பம் தரிக்கின்றனர். 50 பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் கருகலைப்பு செய்கின்றனர். நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றார் என பல்வேறு சுகாதார அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த ஆண்டு சுகாதார அறிக்கைகளின் பிரகாரம் 5 கர்ப்பிணிகள் தானாகவே பாதுகாப்பற்ற முறையில் கருகலைப்பு செய்துள்ளனர். ஆனால் வைத்திய அறிக்கைகளுக்கு உள்ளடங்காத கருக்கலைப்புக்களும் காணப்படுகின்றன. 

20 முதல் 30  வயதுக்கிடைப்பட்டோர் கர்ப்பம் தரிப்பது குழந்தைக்கும் தாய்க்கும் ஆரோக்கியமாகும் அதேவேளை 15 முதல் 19 வயதுக்கிடைப்பட்டோர் அடுத்தடுத்து கர்ப்பம் தரிப்பது ஆபத்தானது. 

குறித்த வயதுக்கிடைப்பட்டோர் மத்தியில் குடும்ப கட்டுப்பாடு என்பது மிக மிக அரிதானதானகவே காணப்படும்.  கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கட்டாயம் போலிக்கமிலம் உள்ளடங்கிய மாத்திரைகளை வைத்தியரின் பரிந்துரைக்கேற்ப உட்கொள்ள வேண்டும். தயாரின்றிய கருத்தரிப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். தேவை ஏற்படின் உடலுறவின்போது ஆணுறைகளை பாவிப்பது சிறந்தது. 

எனவே கருத்தரிப்பு தொடர்பில் விளக்கமின்றிய தம்பதியினர் உரிய வைத்திய ஆலோசனைகளை பெற்று அதற்கேற்ப குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது சிறந்தது என்றார். 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04