(எம்.மனோசித்ரா)

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியை உருவாக்கி அடுத்து வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு வாசஸ்தளத்தில் நடைபெற்ற கூட்டு எதிரணியின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பொதுஜன கூட்டணி அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

இக் கூட்டணி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையும் என்றும் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் இந்த கூட்டணி சார்பிலேயே வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.