ட்ரம்ப்புக்கு முதலிடம் 

Published By: Digital Desk 4

11 Jul, 2018 | 01:17 PM
image

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முதலிடத்தில் உள்ளார்.

உலக நாடுகளில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். நாட்டு நடப்புகள் மற்றும் தன்னை பாதித்த விடயங்கள் குறித்த தனது கருத்துக்களை அதில் பதிவிடுகின்றனர்.  

இந்நிலையில், சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்கள் தொடர்பில் அன்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. குறித்த ஆய்வு கடந்த 12 மாத இடைவெளியில் நடத்தப்பட்டது. குறித்த ஆய்வின் முடிவுகள் வருமாறு:

சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பை டுவிட்டரில் 5.2 கோடிக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக, இந்த பட்டியலில் 4.75 கோடிக்கும் அதிகமான நபருடன் போப் பிரான்சிஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவரை சுமார் 4.3 கோடி நபர்கள் பின்தொடர்கின்றனர்.

முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஜோர்டான் நாட்டு ராணி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

வெளியுறவு துறை அமைச்சர்களில் மிக அதிகமாக பின்தொடர்பவர்கள் பட்டியலில் சுஷ்மா சுவராஜ் முன்ன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right