கிரிபத்கொட - நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவத்தோடு தொடர்புபட்ட உயிரிழந்த நபரின் மனைவியும், மனைவியின் காதலனும் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிரிபத்கொட - நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரது சடலம் நேற்று முன் தினம் மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் ஹுனுபிட்டிய -நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதான  தனுஷ்க தரங்க என்பவராவார்.

குறித்த நபர் வத்தள, ஹெந்தல சந்தியில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர் என்றும் அவருடைய வீட்டிற்கு வந்த இருவரினால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கிரிபத்கொட பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதே வேளை கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் நீதி மன்றில் ஆஜர் படுத்த கிரிபத்கொடை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகளுக்கு,

வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு