இலங்கை சிறையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி இந்திய, ராமேஸ்வரம் மீனவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை கடிதமொன்றை கையளிக்கவுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி ராமேஸ்வரம் மண்டபம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர் சங்க நிர்வாகிகளே மேற்கண்ட கோரிக்கையை விடுக்கவுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாகவே 16 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.