தென்னாபிரிக்கா இலங்கை அணிகளிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தொடர் மிகவும் சவாலானதாக விளங்கப்போகின்றது என ஏஞ்சலோ மத்தியுஸ்  மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் மிகத்திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்,டேல் ஸ்டெயின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் எங்களிற்கு அது பெரும் சவால்,மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர் அவர் பல அணிகளிற்கு நெருக்கடி கொடுத்துள்ளார் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அணியில் பிலான்டர் ரபாடாவும் உள்ளனர் அவர்கள் இருவரும் மிகவும் ஆபத்தானவர்கள் எனவும் மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஆடுகளங்களை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்தகூடிய திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் தென்னாபிரிக்க அணியில் உள்ளனர் என்பது அந்த அணியை பொறுத்தவரை விசேட அம்சமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாங்கள் கடும் சவாலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் நாங்கள் எங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தவேண்டியிருக்கும் எனவும் மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா மிகச்சிறந்த அணி ,கடந்த பல வருடங்களாக அவர்கள்  மிகச்சிறப்பாக விளையாடிவருகின்றனர்,சொந்த மண்ணிலும் வெளியிலும் அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளனர்எனவும் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

ஏபிடிவிலியர்ஸ் அணியில் இல்லை என்பது எங்களிற்கு நிம்மதி அளிக்கும் விடயம்,ஆனால் தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வரிசை  அனுபவம் வாய்ந்ததுஎனவும் மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.