வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து காரணமாக ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று அதிகாலை கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கனரக வாகனமும், கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த வேன்னொன்றும் புளியங்குளம், இராமனூர் பகுதியில் வைத்து மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தின் போது படுகாயமடைந்த இரு வாகனங்களின் சாரதி உட்பட  ஐந்து பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.