20 வருடங்களின் பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த  பிரான்ஸ்

By Priyatharshan

11 Jul, 2018 | 04:09 PM
image

பெல்ஜியத்துக்கு எதிராக செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் செவ்வாய் இரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்ற பிரான்ஸ், 2018 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.


போட்டியின் 51ஆவது நிமிடத்தில் செமுவல் யூம்டிட்டி தலையால் தட்டி போட்ட கோல் பிரான்ஸை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இட்டுச் செல்வதற்கு போதுமானதாக அமைந்தது.

1998இல் தனது சொந்த மண்ணில் சம்பியனான பிரான்ஸ் கடந்த 20 வருடங்களில் மூன்றாவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. ஜெர்மனியில் 2002இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரான்ஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மறுபுறத்தில் 32 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாடிய பெல்ஜியம் மீண்டும் ஏமாற்றம் அடைந்ததுடன் மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் விளையாடவுள்ளது.

போட்டி ஆரம்பித்தது முதல் இரண்டு அணியினரும் கடும் முயற்சியுடன் விளையாடியதுடன் இரண்டு அணியினருக்கும் கிடைத்த கோல் போடும் வாய்ப்புகளை கோல்காப்பாளர்கள் இருவரும் அற்புதமாக செயற்பட்டு தடுத்தனர்.

மேலும் இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் கால்பந்தாட்ட ஆற்றல்களை உயரிய அளவில் வெளிப்படுத்தி இரசிகர்களை பரபரப்பின் உச்சத்துக்கே இட்டுச் சென்றனர்.

முதல் மூன்று நிமிடங்கள் பிரான்ஸ் அணியினர் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் கிலியான் எம்பாப்பேயின் வேகத்தில் பெல்ஜியம் வீரர்கள் சற்று தடுமாறிப் போயினர்.

ஆனால் அடுத்த மூன்று நிமிடங்கள் பதிலுக்கு தமது திறமையை வெளிப்படுத்திய பெல்ஜியம் வீரர்கள் அதிவேக பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்டு எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தனர்.

எந்த அணி பலசாலி என்று கூற முடியாத அளவுக்கு இரண்டு அணிகளினதும் பந்து பரிமாற்றங்கள், வேகமான நகர்வுகள், கோலை நோக்கிய முயற்சிகள் அனைத்தும் விறுவிறுப்பை தோற்றுவித்தன. 

போட்டியின் 13ஆவது நிமிடத்தில் ஈடன் ஹஸார்ட் கோலை நோக்கி உதைத்த பந்து இலக்கு தவறியது.24ஆவது நிமிடத்தில் டொபி ஆல்டர்வெய்ரெல்ட் உதைத்த பந்தை பிரான்ஸ் கோல்காப்பாளர் ஹியூகோ லோரிஸ் வலதுபுறமாகத் தாவி கையால் தட்டி வெளியேற்றினார்.41ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் விரர் பெஞ்சமின் பவார்டின் முயற்சி சில அடிகளால் இலக்கு தவறியது.

போட்டியின் இரண்டாவது பகுதியில் ஆக்ரோஷத்துடன் விளையாடிய பிரான்ஸ் 51ஆவது நிமிடத்தில் உரிய பலனைப் பெற்றது. வலது புறத்திலிருந்து அன்டொய்ன் க்றீஸ்மான் உயர்த்திய கோர்ணர் கிக்கை நோக்கி உயரே சென்ற செமுவல் யும்டிட்டி தலையால் தட்டி போட்டியின் முதலாவது கோலை பிரான்ஸ் சார்பாக போட்டார்.

சில நிமிடங்களில் பெல்ஜியம் வீரர் மேரௌன் பெல்லானி தலையால் தட்டிய பந்து இலக்கு தவறி வெளியேறியது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் வீரர் எம்பாப்பே பின்னோக்கிப் பரிமாறிய பந்தை ஒலிவியர் கிரூட் கோலினுள் புகுத்த முயற்சித்தபோது பெல்ஜிய பின்கள வீரர் வின்சென்ட் கொம்ப்பெனி அதனை முறியடித்தார்.இதனைத் தொடர்ந்து முரட்டுத்தனமாக விளைாடியதன் காரணமாக பெல்ஜியம் அணித் தலைவர் ஈடன் ஹஸார்ட் (63 நி.), அவரது சக வீரர் 

ஆல்டர்வெய்ரெல்ட் (71 நி.) ஆகிய இருவரும் மஞ்சள் அட்டைக்கு இலக்காகினர்.போட்டியின் 81ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் விட்செல் மிகவும் பலமாகவும் சற்று தாழ்வாகவும் உதைத்த பந்தை நோக்கி இடது பக்கவாட்டில் தாவிய பிரான்ஸ் கோல்காப்பாளர் லோரிஸ் இரண்டாவது முறையாக கோல் போடப்படுவதைத் தடுத்தார்.

88ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்துக்கு கோல் போடுவதற்கு அடுத்தடுத்து கிடைத்த இரண்டு வாய்ப்புகள் நழுவிப்போயின. இரண்டு சந்தர்ப்பங்களிலும் கெவின் டி ப்றயன் பரிமாறிய பந்தை என்ஸொன்ஸியும் லூக்காக்குவும் கோலாக்க எடுத்த முயற்சிகள் வீண்போயின.

இதனிடையே 87ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் எங்கொலோ கென்டே மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.போட்டியின் 94ஆவது நிமிடத்தில் பந்தை கையில் பற்றிப்பிடித்தவாறு நேரத்தை கடத்திய எம்பாப்பே அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார். 

இவர் கடந்த போட்டியிலும் மஞ்சள் அட்டைக்கு இலக்கானதால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழக்கின்றார்.உபாதையீடு நேரத்தில் பிரான்ஸ் வீரர் க்றீஸ்மானின் கோ் முயற்சியை பெல்ஜிய கோல்காப்பாளர் திபோட் கோர்ட்டொய்ஸ் இலகுவாக தடுத்து நிறுத்தினார்.கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கொரென்டின் டொலிசோவின் முயற்சியையும் கோர்ட்டொய்ஸ் திசை திருப்பினார். 

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12
news-image

தனுஸ்க தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம்...

2023-01-30 14:50:48
news-image

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக...

2023-01-30 13:43:26
news-image

சபாலென்காவுக்கு முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம்

2023-01-30 12:35:05
news-image

நியூஸிலாந்துடனான டி20 தொடரை சூரியகுமாரின் துடுப்பாட்ட...

2023-01-30 12:31:53
news-image

ஆஸி. பகிரங்க டென்னிஸில் சம்பியனான ஜோகோவிச்,...

2023-01-30 09:10:57
news-image

இங்கிலாந்தை வீழ்த்தி அங்குரார்ப்பண 19இன் கீழ்...

2023-01-29 22:36:15