ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில்   பங்கேற்பதற்காகவே அவர் யாழ் செல்கிறார்.

யாழ் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடொன்றிலும் கலந்துகொள்வார்.

ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வது இது முதல் முறையென்பது குறிப்பிடத்தக்கது.