போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ள பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரமபெரேரா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கும் இது பொருந்தும் என குறிப்பி;ட்டுள்ளார்.

சமீபத்தில் இடம்பெற்றுள்ள கொலைகள் மற்றும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்தபடியே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது ஆகியவற்றை கருத்தில்கொண்டு அமைச்சரவை இந்த கூட்டு முடிவை எடுத்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் இதனை வரவேற்றுள்ளனர், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி நீதியமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார் என பௌத்தசாசன அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த முடிவை பல வருடங்களிற்கு முன்னரே எடுத்திருக்கவேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.