நேபாளத்தில் மீண்டும் இன்று ஒரு  சிறிய ரக விமானம் இன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேபாளத்தின் மேற்குப்பகுதியில்  11 பேருடன் பயணித்துக்கொண்டு இருந்த குறித்த விமானத்தில்  ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மலைப்பகுதி அருகே இருந்த  விவசாய நிலத்தில்  அவசரமாக தரையிறங்க முயற்சித்த போது  இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் விமானத்தின் விமானிகள் இருவருமே பலியானதாகவும் பயணிகள் 9 பேரும் காயமடைந்துள்ளனர்.  

சம்பவ இடத்திற்கு  ஹெலிகெப்டர் மூலமாக ராணுவ வீரர்களும் மீட்புக்குழுவினரும்  விரைந்துள்ளது.