தாய்லாந்தின் குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களில் மேலும் மூவரை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் மேலும் மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எஞ்சியுள்ள ஓரு சிறுவனையும் வைல்ட்போர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை  முதலில் ஒரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

உடனடியாக அந்த சிறுவனை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதன் பின்னர் ஏனைய இரு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.