(எம்.மனோசித்ரா)

அரச நிர்வாக அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த அரச நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் நிமல் கருணாசிறி தெரிவத்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளாலர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக எம்மால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இது வரையில் எந்ததீர்வும் வழங்கப்படவில்லை. எனினும் நீதித்துறைசார் அரச அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

அரச ஊழியர்கள் எனும்போது அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 

எனவே மேற்கூறிய காரணங்களை முன்வைத்து சுகயீன விடுமுறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என்றார்.