விசாரணைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரியை கொலை செய்த பிக்கு: இரத்தினபுரியில் சம்பவம்

Published By: J.G.Stephan

10 Jul, 2018 | 03:59 PM
image

இரத்தினபுரி – கலெந்த பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றுக்கு கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் பணி புரிந்து வந்த பொலிஸ் அதிகாரியே  இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலெந்த பௌத்த விகாரையில் உள்ள பிக்குவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது. இதுதொடர்பில் விசாரணை செய்ய பொலிஸ் அதிகாரி குறித்த இடத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த பிக்கு பொலிஸ் அதிகாரியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸ் அதிகாரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவதற்கு இடையில் உயரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.பி.ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பிக்குவை கைது செய்வதற்கு இரத்தினபுரி பொலிஸ் தலைமை அதிகாரி குறித்த இடத்துக்கு சென்ற போது பிக்கு, அவர் மீது கைக்குண்டு ஒன்றையும் வீச முற்பட்டுள்ளார்.

எனினும் பிக்குவை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39