சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகதளுவ பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பெண் மீது மோட்டார் சைக்களில் மோதியதில் குறித்த பெண் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்களின் சாரிதியே 70 வயதுடைய மரே மார்கிரட் என்ற வயோதிப பெண் மீது மோதியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சாரதியையும் பொலிஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.