ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையதிற்கு அருகே தற்கொலைப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், படுகாயமடைந்த நால்வர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.