மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று நாடு திரும்புகையில் மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை பிரபாகரன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2006ஆம் ஆண்டில் தொழில் நிமித்தம் கட்டார் நாட்டுக்கு சென்று பின்னர் 2013ம் ஆண்டில் நாடு திரும்பி அதே ஆண்டில் மீண்டும் தொழிலுக்காக குறித்த நாட்டுக்கு சென்றிருந்தார். 

பின்னர் நேற்று 5.30 மணியளவில் நாடு திரும்புகையில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.