உலகக் கிண்ணக் கால்­பந்து தொட­ருக்­கான ஸ்பெய்ன் அணியின் பயிற்­சி­யா­ள­ராக ஜூலென் லோப்­டெகு இருந்தார்.

ரியல் மட்ரிட் கழ­கத்தின் பயிற்­சி­யாளர் பொறுப்­புக்கு அவர் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதை அறிந்த ஸ்பெய்ன் கால்­பந்து சங்கம் அவரை அதி­ர­டி­யாக நீக்­கி­யது. 

உலகக் கிண்ணப் போட்டி தொடங்­கு­வ­தற்கு முந்­தைய நாள் இச் சல­ச­லப்பு அரங்­கே­றி­யது. உட­ன­டி­யாக ஸ்பெய்ன் அணியின் புதிய பயிற்­சி­யா­ள­ராக அந் நாட்டின் முன்னாள் வீரர் பெர்­னாண்டோ ஹியரோ நிய­மிக்­கப்­பட்டார்.

உலகக் கிண்ணப் போட்­டியில் முன்னாள் சம்­பி­ய­னான ஸ்பெய்ன் அணியின் செயற்­பாடு எதிர்­பார்த்த அள­வுக்கு இல்லை. 

2 ஆவது சுற்றில் ரஷ்­யா­விடம் பெனால்டி ஷூட்–­அ­வுட்டில் வீழ்ந்து மூட்­டை யைக் கட்­டி­யது.  இந் நிலையில், இத் தோல்வியின் எதி­ரொ­லி­யாக பயிற்­சி­யாளர் பதவியிலிருந்து பெர்னாண்டோ ஹியரோ நேற்று விலகினார்.