தாய்லாந்து குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களில் 8 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளதோடு, மீட்பு பணிக்காக எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் சிறிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

குறித்த நீர்மூழ்கி கப்பல் வெறும் எட்டு மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 13 பேரில்  8 சிறுவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்திலுள்ள தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள், தாய்லாந்தை சேர்ந்த பாடசாலை கால்பந்து வீரர்கள் சிக்கிக்கொண்டனர்.

கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.

கடந்த வாரம் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது.

குகையின் வேறு பகுதியில் துளையிட்டு அதன் வழியாக தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிட்டு, மாணவர்களை வெளியே கொண்டு வரலாம் என்று முடிவெடுத்தனர். இதற்காக எலோன் மஸ்கை பயன்படுத்தவுள்ளனர். 

முதற்கட்டமாக நேற்று 4 மாணவர்களை மீட்டுள்ள நிலையில் தற்போது மீட்பு பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

மீட்பு குழு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டார் தூரத்தில் உள்ள இடத்தில் தான் சிறுவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் இந்த இடத்தை அடைய மிகவும் குறுகலான பகுதியை தாண்டி செல்ல வேண்டும். இந்த பகுதியில் ஒக்சிஜன் சிலிண்டர்களை பொருத்தும் வேலை தற்போது இடம்பெற்று வருகிறது.

இதற்காக எலோன் மஸ்க் வேறொரு யுத்தியை உருவாக்கி உள்ளார். அதன்படி குறுகலான பாதைக்குள் ஒக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து செல்லும் வகையில், மிக சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கியுள்ளார். இதை வெளியில் இருந்து இயக்க முடியும். இது முழுக்க தானாக இயங்கும் திறனும் கொண்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸின் ரொக்கெட்டுகளில் ஒன்றான, பல்கான் ஹெவி ரொக்கெட் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது தானாகவும் இயங்கும், வெளியில் இருந்தும் இயங்க முடியும். இதை குறுகலான, குகையின் பாதைக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதன்படி, உள்ளே ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்ப முடியும். இதை இப்போது சோதனை செய்து வருகிறார்கள். வெறும் 8 மணி நேரத்தில் இந்த மொத்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று மேலும் 4 பேர் மீட்கப்பட்டுளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் முதலுதவி அளிக்கப்பட்ட பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள 5 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் மீட்புக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.