கொழும்பு பெருமளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என  தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாள டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள ஸ்டெயின் தனது டுவிட்டரில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் 2006 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நகரம் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதிகள் சுத்தமாக உள்ளன, வீதிகள் சிறப்பானவையாக உள்ளன, பூங்காக்கள் சிறப்பாக பராமிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ள அவர் 2006 இல் நான் முதல்தடவை இங்கு வந்தவேளை காணப்பட்ட நிலையுடன் ஒப்பிட்டால் பாரிய முன்னேற்றம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.