கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை பகுதியல் நேற்று  சட்ட விரோத வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 4 கிலோ 405 கிராம் வல்லம்பட்டையை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் பொருப்பதிகாரி ஜ.பி.அனுரதேசப்பிரிய சுசந்த தெரிவித்தார்.

.  வாகரை கஜிவத்தையில் உள்ள காசியப்ப கடற்படையினர் தெரிவித்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை பேத்தாழை பகுதியில் வைத்து அவரிடம் இருந்த பையினை பரிசோதித்த போது இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார். 

சந்தேக நபரை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.