(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான எந்த தேவைப்பாடும் அரசாங்கத்திற்கில்லை. புதிய தேர்தல் முறைமையில் காணப்படும் எல்லை நிர்ணயம் போன்ற சில விடயங்கள் காரணமாகவே தேர்தலை நடத்த முடியாதுள்ளது என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் முறைமையில் சிறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்த குறைபாடுகளை திருத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. 

ஆகவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய முறைமையில் தேர்தல் இவ் வருடத்தின் இறுதிக்குள் நடத்தப்படும். அதில் எந்த மாற்றமுமில்லை என்றார்.