காணி அபகரிப்பிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த கல்லடி மக்கள் ; ஒருவர் கைது

Published By: Priyatharshan

09 Jul, 2018 | 11:10 AM
image

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நீர் வழிந்தோடும் அரச காணியை அத்துமீறி பிடிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் இது தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இன்று காலை கல்லடி பாலத்திற்கு அருகில் நீண்டகாலமாக அரச காணியாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காணியொன்றுக்குள் நுழைந்தவர் குறித்த காணிக்குள் வேலி அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த காணியை அடைத்து அதனை கொழும்பில் இருந்து வருகைதந்த வேறு இனங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையினை குறித்த நபர் மேற்கொண்டிருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அந்த பகுதியூடாகவே மழை காலங்களில் காத்தான்குடி தொடக்கம் பல பகுதிகளில் வெள்ளநீர் வழிந்து மட்டக்கள

ப்பு வாவிக்குள் செல்வதாகவும் குறித்த பகுதியை அபகரிக்கும் நிலையில் போலி ஆவணங்களை கொண்டுவந்து குறித்த பகுதியை ஆக்கிரமிக்க முற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.

குறித்த காணியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியென அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பாதகையினை உடைத்துவிட்டு குறித்த காணியை வேலியிட சிலர் முயற்சித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதேச கிராம சேவையாளர் திருமதி நவஜீவிகா வேந்தன் ஆகியோர் குறித்த பகுதியில் நடைபெற்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு வந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.

குறித்த காணி அரச காணியெனவும் அதற்கான அறிவித்தல் பலகை நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் பிரதேச கிராம சேவையாளர் திருமதி நவஜீவிகா வேந்தன் தெரிவித்தார்.

இந்த காணியின் ஊடாக பல இடங்களின் வெள்ள நீர்  காலாகாலமாக வடிந்துசெல்வதாகவும் இதனை அடைத்தால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59