இந்திய கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 13 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மீனவர்களின் 09 படகுகள் அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினரின் கீழ் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை அந்த நாட்டு கடல் எல்லையை தாண்டிய இலங்கை்கு சொந்தமான 2 படகுககளை 2500 கிலோகிராம் மீன்களுடன் இந்திய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.