(இராஜதுரை ஹஷான்)

2017 ஆம் ஆண்டு ரவி கருணாநாயக்க ஐ.ஒ.சி. நிறுவனத்துடன் செய்து கொண்ட முறையற்ற உடன்படிக்கையே எரிபொருள் கட்டண மாற்றம் தொடர்பில் நீடித்துவரும் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் முறையற்ற மூன்று வருட பொருளாதார முகாமைத்துவத்தின் காரணாக பொருளாதாரம் பல துறைகளில் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

அதாவது 2017 ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஐ.ஒ.சி. நிறுவனத்துடன் செய்து கொண்ட முறையற்ற உடன்படிக்கையே எரிபொருள் கட்டண மாற்றம் தொடர்பில் நீடித்துவரும் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம்.

இந் நிலையில் தற்போது அரசாங்கம் தனது நிர்வாக இயலாமையினை மறைக்க கடந்த அரசாங்கத்தின் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது. எனவே தற்போது இடம்பெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிரந்தர தீர்வு கிடைக்கப் பெறும் என்றார்.