பங்களாதேஷில் ஆட்டோ ரிக்‌ஷாவும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் ப பலியாகினர். 

பங்களாதேஷின் மவுல்விபசார் மாவட்டத்தில் நடாம்பூர் பகுதியில் அமைந்துள்ளது மவுல்விபசார் - சிதெட் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து சென்ற பொலிஸார் உடல்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு. விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.